449
யாழ்ப்பாணம் மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் இன்றைய தினம் புதன்கிழமை, டிப்பர் வாகனமும் ஹன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. மருதனார்மடத்தில் இருந்து உரும்பிராய் நோக்கி பயணித்த டிப்பரும், உரும்பிராய் சந்தியில இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த ஹன்ரர் ரக வாகனமுமே விபத்துக்குள்ளானது.
அதன்போது டிப்பர் மற்றும் ஹன்ரர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love