529
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்கு சென்றவர்களின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளனர்.
பளை பகுதியை சேர்ந்த வீட்டார் யாழ்.போதனா வைத்தியசாலை கிளினிக்குக்கு வந்து மருந்து எடுத்த பின்னர் தமது வீட்டுக்கு சென்ற வேளை வீட்டின் முன் கதவு திறந்து காணப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது , வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, மின் மோட்டார் உள்ளிட்ட மின் சாதனங்கள் மற்றும் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளன. அது தொடர்பில் வீட்டார் பளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
Spread the love