457
கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ், மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் மாலை 5 மணி முதல் 06 மணி வரையிலான ஒரு மணி நேரமும் , சனிக்கிழமை சூரன் போர் அன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 06 மணி வரையிலும் வீதி தடை போடப்பட்டு , வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கும்.
எனவே வீதியால் பயணிப்போர் அந்நேரங்களில் மாற்று வீதி ஊடாக தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Spread the love