இன்றையதினம் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் சமாப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்புகு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின் கொண்டுவரப்படும் வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
இதற்கமைய 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட அரசாங்கச் செலவு 7,326 பில்லியன் ரூபாவாகும். 5,334 பில்லியன் ரூபாய்கள் தொடர்ச்சியான செலவுகள் அல்லது மானியங்கள் மற்றும் சம்பளம் போன்ற செலவுகளுக்காகவும் . மூலதனச் செலவு அல்லது புதிய திட்டங்கள் அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான செலவு 1,225 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. .
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெற்று
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13 ஆம் வரை 19 நாட்களுக்கு நடத்தப்பட்டு இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.