526
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 2023ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தலைவர் பிரசன்ன ரணசிங்கவும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உப தலைவர் சதுர டீ சில்வா, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பணிப்பாளர் பிரியந்த வீரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ஆறு பயிற்சி நிலையங்களில் 24 பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 500 வரையான மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது
Spread the love