491
தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறி
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தினர்.
வழக்கினை விசாரித்த நீதவான் , கடை உரிமையாளரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
Spread the love