502
புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது , வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து , இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனையில் , சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து , சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டு ள்ளது.
Spread the love