371
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், 23 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
2000 ஆண்டிற்கு பின்னர் பின்னர் இம்முறைதான் மாணவியொருவர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். பாடசாலைக்கு தனது ஒழுங்கான வரவு, அதிபர் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் விடா முயற்சியே தனது வெற்றிக்கு காரணமென குறித்த மாணவி தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றிய நான்கு மாணவர்களில் மாணவன் ஒருவன் 144 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love