274
போலி மணல் ஏற்றும் அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மணல் அனுமதிப் பத்திரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்தப் பத்திரம் போலியானது என்று கண்டறியப்பட்டிருந்தது. விசாரணையின் அடிப்படையில் கிளிநொச்சி மற்றும் விசுவமடுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான அனுமதிப் பத்திரம் என்று தெரிந்தும் அதை ஒருவருக்கு வழங்கியமை, போலியான அனுமதிப் பத்திரம் என்று தெரிந்தும் அதைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான அனுமதிப் பத்திரம் ஒன்றுக்காக சுமார் 15 ஆயிரம் ரூபா வரையில் அறவிடப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Spread the love