Home உலகம் அமெரிக்கா – கனடா எல்லையில் கார் வெடித்தது – இருவர் பலி!

அமெரிக்கா – கனடா எல்லையில் கார் வெடித்தது – இருவர் பலி!

by admin

அமெரிக்கா – கனடா எல்லையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று திடீரென தடுப்புச் சுவரில் மோதி வெடித்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டுள்ளது.

அமெரிக்கா – கனடா எல்லையில் நயாகரா நீர்வீழ்ச்சி அருகே நியூயோர்க் மாநிலத்தையும் ஒன்டாரியோவையும் இணைக்கும் ரெயின்போ பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் ஒன்று மோதி வெடித்தது. இதில் கார் முற்றிலும் எரிந்ததுள்ள நிலையில், இந்தக் கார் அமெரிக்காவில் இருந்து சென்று கொண்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகவும், சோதனைச் சாவடி அருகே பெரிய புகைமூட்டம் காணப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி காட்சிகளிலும் இந்த விபத்து பதிவாகி இருக்கிறது. இருநாடுகளுக்கும் எல்லை என்பதால், அங்கு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், ”நியூயோர்க் நகரின் வடமேற்கே சோதனைச் சாவடியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

இது தீவிரவாத தாக்குதலாக தெரியவில்லை. அதற்கான எந்த ஆதாரமும் தற்போது கிடைக்கவில்லை. இது ஒரு பயங்கரமான சம்பவம், ஒரு விபத்து” என்று தெரிவித்துள்ளார்.

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள பெரிய ரெயின்போ பாலத்தில் கார் வெடித்துள்ளது. காரின் எஞ்சின் தவிர அனைத்து பாகங்களும் எரிந்துவிட்டன.

இரண்டு பக்கங்களிலும் இருக்கும் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சம்பவ இடத்தில் தேவையான அவசர வேலைகளில் ஈடுபட்டனர்.

கார் அதிவேகத்தில் வருவதும், விமானம் போல பறந்து சென்று விபத்துக்குள்ளாவதும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.

அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் வெடித்து, தீப்பற்றி எறிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இது மிகவும் மோசமான சம்பவம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More