சீனாவின் வட பகுதியில் பரவும் நிமோனியா அலை தொடர்பான தகவல்களை சீனாவிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது. நிமோனியாவால் பீடிக்கப்பட்ட சிறுவர்கள் காரணமாக சீனாவின் சில பகுதிகளில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குளிர்காலத்தில் காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கு COVID தடுப்பு நடவடிக்கைகள் நீக்கப்பட்டதே காரணம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிமோனியா பரவலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சீனாவில் உள்ள மக்களை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
SARS-CoV-2 வைரஸ் பரவல், இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல், இன்னும் பிற தொற்றுகளின் நிலவரம் குறித்து தெளிவான அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார நிறுவனம் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.குழந்தைகளை பாதிக்கும் RSV வைரஸ், மைகோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை பற்றியும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.