360
கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கை இடைநிறுத்துமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
Spread the love