யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரிகளினால் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை(27) காலை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலுமில்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு தடை கோரியே மனு தாக்கல் செய்யப்பட்டது.