460
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த கஜந்தன் (வயது 26) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
அலுவகத்தில் பணியில் இருந்த வேளை , தண்ணீர் வராததால் , தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக சென்ற வேளை , அங்கிருந்த மின் வயரில் ஏற்பட்ட சேதம் காரணமாக பணியாளருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
அதனை அடுத்து அலுவகத்தில் கடமையில் இருந்த ஏனையவர்கள் இளைஞனை மீட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love