379
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கந்தன் வெளிக் கண்டம் ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று(29) மீட்கப்பட்டுள்ளது.
வயலுக்கு சென்றவா் கடந்த 03 நாட்களாக வீடு திரும்பாத நிலையில் வயல் பிரதேசத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து சடலம் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் தபால் வீதி குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சதீஸ்கரன் (40 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love