443
7 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்குமிடையே மீண்டும் போா் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
போர் நிறுத்தத்தின் போது நேற்று (30) வரை இஸ்ரேலால் கடத்தப்பட்ட 110 பணயக்கைதிகளும், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 240 பலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை , காசா பகுதியில் உள்ள இலக்குகள் மீது தாம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
Spread the love