375
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அதிபருடன் கலந்துரையாடியதுடன், பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், கல்வி பொது தர சாதாரணம் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர். அதேவேளை அகில இலங்கை ரீதியில் வேம்படி மாணவி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கல்லூரி அதிபர் இராஜினி முத்துக்குமாரை சந்தித்து, கலந்துரையாடியதுடன், பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிகளையும் பாராட்டினார்.
Spread the love