487
யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. யாழ்.நகர் பகுதியை அண்டிய முட்டாஸ்கடை சந்தி பகுதிகளில் இரவு வேளைகளில் , வீதியில் பயணிப்போரை வழிமறிக்கும் போதை ஆசாமிகள் , அவர்களை மிரட்டி , பணப்பையில் (பேர்ஸில்) இருக்கும் பணத்தை வழிப்பறி செய்து வருகின்றனர்.
காங்கேசன்துறை வீதி – ஸ்ரான்லி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளும் சந்திக்கும் சந்தி பகுதியான குறித்த சந்தியில் மின் விளக்குகள் பொருத்தப்படாமையால் , இருளில் மறைந்து இருக்கும் போதை ஆசாமிகள் , வீதியில் தனியாக மோட்டார் சைக்கிள் ,சைக்கிளில் பயணிக்கும் நபர்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேர்ஸில் இருக்கும் சிறு தொகை பணத்தினை மட்டுமே கொள்ளையடித்து வருவதனால் , பாதிக்கப்பட்டவர்கள் காவல் நி லையங்களில் முறைப்பாடு செய்ய பின்னடிக்கின்றனர். இதனால் போதை ஆசாமிகளின் வழிப்பறி கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.
அதனால் சந்தி பகுதியில் மின் விளக்குகளை பொருத்துவதற்கு யாழ்.மாநகர சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , யாழ்ப்பாண காவல்துறையினர் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.
Spread the love