404
யாழ்ப்பாணத்தில், நேற்றைய தினம் புதன்கிழமை இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புன்னாலை கட்டுவான் வடக்கை சேர்ந்த செல்வம் சிவானந்தம் (வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார்.
Spread the love