மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு காரணமாக மன்னார் நகர சபைக்கு சொந்தமான பாப்பாமோட்டை பகுதியில் அமைந்துள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது டன் நகர சபையினால் திண்மக் கழிவு மற்றும் மலக்கழிவு அகற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் பல நாட்களாக மருத்துவக்கழிவு ,உணவுக்கழிவு மற்றும் மலக் கழிவுகள் அகற்றப் படாமையினால் மன்னார் பொது வைத்தியசாலைக்குறிய பிராந்திய சுகாதார கழிவகற்றல் நிலையம் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளது டன் துர் நாற்றமும் வீசி வருகிறது.
அதே நேரம் நோயாளர் விடுதிகளில் உள்ள மலசல கூடங்கள் நிறைந்து வழிவதால் விடுதிகளை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதுடன் மழை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கழிவகற்றல் செயற்பாடுகள் முன் னெடுக்கப்படாத பட்சத்தில் விடுதிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதுடன் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு களஞ்சியப் படுத்தப்பட்ட குப்பைகளால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பும் காணப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப் படுகின்ற நிலையில் வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளர் இல்லாமையும் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வைத்தியசாலை மாத்திரமின்றி பொது இடங்கள். வீடுகள்.அலுவலகங்கள் உணவங்களிலும் குப்பைகள்,அகற்றப்படாத நிலையே காணப்படுகின்றது.
,