298
ஶ்ரீலங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவன ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள ஶ்ரீலங்கா ரெலிகொம் அலுவலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நிறுவன பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் , ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்துகின்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலுக்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை நிறுத்து , தேசிய வளங்களை விற்பதை நிறுத்து , பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகக் கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு இடமளிக்க முடியாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Spread the love