359
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கலந்துரையாடல் மண்டபமானது சிறைச்சாலை ஆணையாளர் காமினி.பி.திசாநாயக்கவினால் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.
தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரனின் நிதி அனுசரணையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தியாகி அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் குழந்தைகளுக்காக கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரன், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார், யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love