390
வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு தொகுதி உலருணவுப் பொருட்கள் இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நோக்கில் சர்வதேச அரிமா கழகத்தினால் ஆயிரம் பொதிகள் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜி.ஏகாந்தனிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது ஐனாதிபதியின் வடக்கு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் இளங்கோவன், ஆளுநர் செயலக அதிகாரிகள், வடமாகாண அரிமாக் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். குறித்த பொதிகள் விரைவில் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love