319
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைகலப்பில் கைதியொருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் நேற்று சனிக்கிழமை மாலை இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியதில் 30 வயதான கைதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
Spread the love