480
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து காலை 9 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.
ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் 1004 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love