சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கையா்கள் ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் UU 0050 என்ற விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களைச் சோ்ந்த 21 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை காவல்துறையினா் இணைந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை , ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக நுழையும் மக்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மனித கடத்தல்காரர்களால் கடல் வழியாக திட்டமிடப்பட்ட சட்டவிரோத குடியேற்றங்களில் ஈடுபடுவதையோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதையோ தவிர்க்குமாறு இலங்கை கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது