316
யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (25.12.23) இரவு முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதனை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி, விபத்து இடம்பெற்ற இடத்தில் தனது முச்சக்கர வண்டியை கைவிட்டு விட்டு , தப்பி சென்று இருந்தார்.
அந்நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை தனது வீட்டுக்கு அருகில், தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
கட்டுவான் மேற்கை சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரம் மயூரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
Spread the love