329
யாழ்ப்பாணத்தில் தேன் விற்பனையில் ஈடுபடுவது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வல்வெட்டித்துறை தொண்டமானாறு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி, இருவர் தேன் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, மூதாட்டியிடம் தேனை விற்பனை செய்வது போன்று பேச்சுக்கொடுத்து, மூதாட்டி அசந்த நேரம் அவரின் தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மூதாட்டி வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் கோண்டாவில் மற்றும் தெல்லிப்பழையை பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 41 வயதானவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love