317
ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் மதியம் 2 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் பிரதிகளை காலக்கிரமத்தில் தயார்படுத்தி, வடக்கிற்கு செல்லும் ஜனாதிபதியிடம் நேரில் கையளிக்கப்படவுள்ளது.
Spread the love