வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 16 இலட்சம் ரூபாவிற்கு மேல் பண மோசடி செய்த நபர் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
பாணந்துறை – கல்துடாவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபர் ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1,619,000 ரூபாவை ஏமாற்றியுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.