448
மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை மன்னார் ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு மக்களால் அமைக்கப்பட்ட குறித்த நினைவுச் சிலையை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love