341
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மாட்டின் தலையுடன் இளைஞன் ஒருவர் காவல்துறையினரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கீரிமலை பகுதியில் மாடொன்றை சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்குவதாக காங்கேசன்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு காவல்துறையினா் விரைந்த போது , சம்பவ இடத்தில் மாட்டின் தலையுடன் நின்ற இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து, வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் மாட்டிறைச்சியுடன் தப்பி சென்ற ஏனைய நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love