மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. -இதன் போது குறித்த வீட்டில் இருந்து 520 சட்டவிரோத போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாக குறித்த மாத்திரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த நபரிடம் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மன்னார் காவல்துறையினா் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.