364
கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் இன்று மாலை புகையிரதத்துடன் மோதி இளம் குடும்பஸ்தர் உயிாிழந்துள்ளாா். அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
உயிாிழந்தவா் முறிகண்டியை சேர்ந்த 43 வயதான 2 பிள்ளைகளின் தந்தையான டிப்பர் சாரதி எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் காவல்துறை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Spread the love