413
உணவருந்திக்கொண்டு இருந்த வேளை விக்கல் ஏற்பட்டத்தில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த மயில்வாகனம் ஐங்கரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு அருந்திக்கொண்டிருந்த வேளை திடீரென விக்கல் ஏற்பட்டதை அடுத்து , கதிரையில் இருந்து மயங்கி சரிந்துள்ளார். உடனே அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
Spread the love