387
ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நாளைய தினம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த போராட்டதில் அனைத்து தரப்பினரையும் அணி திரளுமாறு ஊடக அமையம் கோரியுள்ளது.
Spread the love