இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடா்பில் தண்டனை அனுபவித்து விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது கல்லீரல் , சிறுநீரகபாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் எனவும் சிறைக்கைதிகள் உரிமை மையம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு திரும்புவதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கின்றாா்
, திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது கால்கள் வீங்கியுள்ளதுடன் கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார். அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.