320
ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது நூலகத்தில் இருந்து பேரணியாக யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love