352
யாழ்ப்பாணம் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில், இடம்பெற்று வரும் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வில் (கார்னிவேல்) போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அதன் போது , அவர்களின் உடைமையில் இருந்து ஒரு தொகை கஞ்சாவை மீட்டுள்ளனர். அதனை அடுத்து அவர்களை கைது செய்து மானிப்பாய் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love