458
மன்னார் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டைப் பண்ணை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை(29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் காவல்துறை குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் செளத்பார் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
போதை மாத்திரைகளுடன் ஏற்கனவே 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செளத்பார் பகுதியில் போதை மாத்திரைகள் விற்க முற்பட்ட இளைஞர் ஒருவரே இன்று திங்கட்கிழமை(29) மாலை கைது செய்யப்பட்டிருந்தா ர்.
குறித்த இளைஞனிடன் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் செளத்பார் புகையிரத நிலைய பகுதி அருகில் கைவிடப்பட்ட அட்டைப் பண்ணை க்கொட்டில் ஒன்றிலே சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல் நிலையத்தில் முன்னிலைப் படுத்தப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love