உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார். சமூக வலையத்தளங்கள் மூலம் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க செனட் சபையில் குற்றச்சாட்டு முன்வைத்த குடும்பத்தினரிடமே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
நேற்று, சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமான வீடியோக்கள் குறிதது பலரும் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் மீது அமெரிக்க செனட் விசாரணை நடத்தியது. இதில் ஜுக்கர்பெர்க் நேரில் பங்கேற்று தனது தரப்பு வாதங்களை முன் வைத்தாா்
ஊடகங்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்த வீடியோவை விசாரணைக்குழு ஒளிபரப்பியது. இதில் பல உயிரிழப்பு சம்பவங்கள் குறித்தும் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.
இதனைத் தொடா்ந்து மன்னிப்பு கோாிய ஜுக்கர்பெர்க் நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வர கூடாது. என்னை மன்னியுங்கள் எனத் தொிவித்துள்ளாா்.
மார்க் சக்கபேர்க் , டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது