முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் எனும் மருந்தினை இறக்குமதி சம்பவம் தொடர்பில் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போதே இவ்வாறு அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்
நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய இன்று முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த கெஹலிய ரம்புக்வெல்லவிடம் , சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.