முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருந்துகளுக்கு அப்பால் ஒட்சிசன் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் கெஹலியவிற்கு, அவர் அமைச்சராக இருந்த போது, இந்தியாவில் உள்ள நிறுவனத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருந்தே வழங்கப்படுவதாகவும் சிங்கபூரில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள், வழங்கப்படுவதாக வெளியான செய்திகள் தவறானவை எனவும் தொிவித்துள்ளாா்.
70 வயதான இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட 7 நோய்கள் உள்ளதாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதனால் அவா் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இரவு வேளைகளில் ஒட்சிசன் வழங்கப்படுகின்றது.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் 145 படுக்கைகளில் 380 நோயாளர்கள் இருப்பதனால இருநூறு வீதம் நெரிசல் காணப்படுவதனால் சிறைவாசம் அனுபவித்து வரும் நோயாளியின் உயிருக்கு அரசும் பொறுப்பு என்பதால், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவா் .
அங்குள்ள நோயாளிகள் அனைவரும் விசேட பிரமுகர்கள் அல்ல, மருத்துவ சிகிச்சைக்கு தகுதியானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் எனும் மருந்தினை இறக்குமதி சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது