தேசிய மக்கள் முன்னணியின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகக் தொிவித்துள்ள தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்காலத்தில் மேலும் பல ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய டீபாது இதனைக் குறிப்பிட்டுள்ள அவா் , தற்போது ஒரு சகாப்தம் ஆரம்பித்துள்ளதாகவும், அங்கு மேலும் மேலும் ஆச்சர்யங்கள் ஏற்படும் எனவும் தொிவித்துள்ளா்ா.
“எங்களது இந்தியப் பயணம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவோ, ஜனாதிபதி ரணில் மூலமாகவோ அல்லது மஹிந்த ராஜபக்ஸவின் மூலமாகவோ நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். நாங்கள் அமைதியாக இருந்தோம். அவர்கள் எங்கள் இந்திய பயணத்தை அறிந்து வியந்தனர். அவர்களால் மட்டுமே இந்தியாவை சமாளிக்க முடியும் என அவர்கள் நினைத்தார்கள். . மேலும் மேலும் இதுபோன்ற ஆச்சரியங்கள் நிகழும் ஒரு சகாப்தம் தொடங்கியுள்ளது,” என அவா் தொிவித்துள்ளாா்.
பெண்கள் மாநாட்டின் இந்த கருத்தாக்கம் குறித்து எதிர்க்கட்சிகளும் வியப்படைந்துள்ளதாகத் தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க, , பெண்களின் விழிப்புணர்ச்சி இவ்வாறாக ஏற்படும் என அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளாா்.
மகிந்த-சந்திரிகா, மைத்திரிபால-மகிந்த, ரணில்-சந்திரிகா போன்ற அரசியல் எதிரிகள் கூட ஒரே மேடைக்கு வரவுள்ள நிலையில் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு எதிராக பல்வேறு கூட்டணிகள் களமிறங்குகின்றன
ரணிலுடனான தனிப்பட்ட போட்டியின் காரணமாக சஜித் அந்த கூட்டத்தில் சேரவில்லை. இல்லையேல் அவரும் அதே கூட்டத்தில் இணைந்திருப்பார் எனவும் அவர் தொிவித்தாா்.