559
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி ((Alexei Navalny) இன்றைய தினம் (16) உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ரஸ்ய ஜனாதிபதி புட்டினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டாா்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சிறையில் வைக்கப்பட்டிருந்த . நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஸ்ய அரசு தெரிவித்துள்ளது. எனினும் , அலெக்சி நவால்னியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் இது வரை வெளியிடப்படவில்லை.
மக்களை ஈர்க்கும் பிரசாரகராக பார்க்கப்பட்ட நவால்னி, 2018 ஆம் ஆண்டு ரஸ்ய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்து அதற்காக பிராந்திய அளவிலான பிரசார அலுவலகங்களை அமைத்தார். எனினுட் இறுதியில் அவர் வாக்களிக்கக் கூட தடை விதிக்கப்பட்டது.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கொடிய விச அமிலம் செலுத்தப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாகி அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், அச்சுறுத்தல்களைத் தாண்டியும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மீண்டும் ரஸ்யாவிற்குள் நுழைந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது
Spread the love