உலக தாய்மொழிகள் தினம் வருடா வருடம் நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகத்தால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தாய்மொழியாம் தமிழ்மொழியால் தரணி அளக்கும் அறந்தழுவிய அறிவியல் பயணத்திற்கான உந்துவிசையாக உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தவகையில் உலக தாய்மொழி தினம் 2024, பெப்ரவரி 21ல் எங்களது வாழ்வை நாங்களே பாடும் விழாவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நுண்கலைத்துறை மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து “எங்களின் வாழ்வை நாங்கள் பாடுகிறோம்.” என்ற தொனிப்பொருளில் இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வானது கிழக்குப் பல்கலைகழக நுண்கலைத்துறைத் தலைவர் திருமதி து.சத்தியஜித் அவர்களின் தலைமை, ஒருங்கிணைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைக் கலைக்கூடத்தில் நாளைய தினம் (21.02.2024) காலை 8.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. வ. குணபாலசிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாண்புசெய் கலைஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், ஓய்வுபெற்ற அதிபர் திருமதி இந்திராணி புஷ்பராஜா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பேராசிரியர். சி.ஜெயசங்கர் அவர்களின் நெறிப்படுத்தலில் நுண்கலைத்துறை மாணவர்கள் வெவ்வேறு தொனிப்பொருள்களில் பாடல்களை ஆற்றுகை செய்யவுள்ளனர்.
பாடல்கள் மனதை கவருவன, சிந்தனையைத் தூண்டுவன. பாடுவதற்கும், கேட்பதற்குமென பாடல்கள் விரும்பப்படுவன. எல்லா மனிதர்களதும் விருப்பத்திற்குரிய பாடல்கள் என்னும் கலைவடிவத்தின் மூலமாகக் கலை நிகழ்ச்சிகளையும்; கலை ஆய்வு நிகழ்ச்சிகளையும் கல்வியுடன் இணைந்த கலைச் செயற்பாடாக முன்னெடுக்கும் கலைத்திட்டத்தின் பகுதி இது.
கல்வியும் கலைகளும் மனிதர் மனிதர்களுடனும் எல்லா உயிர்களுடனும் இயற்கையுடனும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் ஆகும்.
“எங்களின் வாழ்வை நாங்கள் பாடுகிறோம்” என்ற இசை நிகழ்ச்சியில் கீழ்வரும் பாடல்கள் இசை ஆற்றுகை செய்யப்பட இருக்கின்றன.
- வாவி போடும் சோற்றில் வாழும் மனிதர்கள் நாங்கள்
- முள்ளுச் செடியில் மிளிரும் மலர்கள்
- பிள்ளைகளை சூழலிலே வாழவிடுவோம்
- நாங்கள் வாழவேண்டும்
- நிலவுக்கு சொந்தக்காரர் யாரம்மா?
- வானமெங்கும் வெள்ளி பூக்கள்
- பத்தை என்றும் செத்தை என்றும்
- தங்க மணிகள் தலையசைத்து
- இருந்து செல்லும் இடத்தில் எல்லாம்
- எங்களின் அறிவில் எங்களின் திறனில்
- பட்டமா… பருந்தா… என்ன…
- முத்து முத்தாய் நெல்மணிகள்
- பூமியே இயற்கையே நீ வாழி வாழி
இசை ஆற்றுகையில் பங்குபற்றும் மாணவர்கள் விபரம் பின்வருமாறு
- வ.நிரோஜினி
- பா.சுரேஸ் காந்தன்
- அ.டெனிஸ்மேரி
- சி.தர்சனா
- ர.திசாந்தினி
- சீ.செந்துஜன்
- ப.அனுஸ்தரன்
- ந.கோபிகா
- தே.நிதர்சனா
- நா.லக்சிகா
- ர.ரஞ்சுதா
- தே.சர்மிலா
- ல.லாவணியா
- சா.சோமியா
- ஹ.பா.அப்ரா
- ர.கஸ்தூரி
- தே.ஜெகதா
- வி.சதுர்சனா
- வ.நிறையினி
- ப.கண்ணன்
எங்களின் அறிவில் எங்களின் திறனில்…
தங்கி நிற்போம் நாங்கள்…
எங்களின் நிலத்தில் எங்களின் உழைப்பில்..
விளைவித்தே வாழ்வோம்…
கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைகளை
நீக்கி எழுந்திடுவோம்….
நீக்கி எழுந்திடுவோம்…
சூழலில் இணைந்து வாழும் வழிகளை…
மீளவும் ஆக்கிடுவோம் – நாங்கள்
மீளவும் ஆக்கிடுவோம்…