யாழ் – வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் வைத்து தம்பதி கடத்தப்பட்ட போது கடற்படையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள கடற்படை தீர்மானித்துள்ளது.
இது தொடா்பில் கருத்துத் தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
கடந்த 11 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொன்னாலைச் சந்தியில் கடற்படைச் சாவடிக்கு அருகில் தம்பதி ஒன்று கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டதுடன் கணவன் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தாா். கடற்படைச் சோதனை சாவடிக்கு அருகில் குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றமை குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது