374
பொத்துவில் கோமாரி பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி 52 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை குறித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி சக நண்பா்களுடன் மோட்டார் சைக்கிளில் கோமாரி கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென்று வீதியால் வந்த யானை அவரை தாக்கியதனையடுத்து ஏனையோர் அங்கிருந்து சென்றுள்ளனர்.
உயிாிழந்தவாின் சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
Spread the love