டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமுலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமுலாக்கத்துறை அவரை கைது செய்தாலும், அவர் தொடர்ந்தும் முதல்வராக நீடிப்பார் என ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மதுபானக் கொள்கையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமுலாக்கத்துறை விடுத்த அழைப்பை அவர் நிராகரித்து வந்தார்.
இதனை தொடா்ந்து அமுலாக்கத்துறை தன்னை எகைது செய்வதைத் தடுக்குமாறு கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். எனினும், இன்று அமுலாக்கத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். இது பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கல் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.