194
துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கடந்த சனிக்கிழமை (30.03.24) நீக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டம் கட்சித் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை (30.03.24) இடம்பெற்றதுடன், இக்கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
Spread the love